மார்கழி பூவே மார்கழி பூவே (Margali poovae)
படம்: மே மாதம்
உணர்வு: வியப்பு, ஏக்கம்
மார்கழி பூவே மார்கழி பூவே உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும்
மார்கழி பூவே மார்கழி பூவே உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன்மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன்மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
மார்கழி பூவே மார்கழி பூவே உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும்
பூக்களை பிரித்து புத்தகம் படித்தேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதித்தேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதை கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்கையின் ஒரு பாதி நான் இங்கு வசிப்பேன்
வாழ்கையின் மறுபாதி நான் இங்கு ரசிப்பேன்
காற்றில் ஒரு மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்
காவிரி மணலில் கால் வைத்து நடந்ததுமில்லை
கடற்கரை அலையில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச்சுட மழையில் நனைந்ததுமில்லை
சாலையில் நானாக போனதுமில்லை
சமையத்தில் நானாக ஆனதுமில்லை
ஏழை மகள் காணும் இன்பம் நான் கண்டதில்லை
மார்கழி பூவே மார்கழி பூவே உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும்
மார்கழி பூவே மார்கழி பூவே உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன்மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன்மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
மார்கழி பூவே மார்கழி பூவே உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும்
Comments
Post a Comment