தேசம் ஞானம் கல்வி (Desam gnanam kalvi)


படம்: பராசக்தி
உணர்வு: எழுச்சி
ஆக்கம்: உடுமலை நாராயணகவி


தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசு முன் செல்லாதடி
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
காசு முன் சொல்லாதடி குதம்பாய் காசு முன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்கு பின்னாலே குதம்பாய் காசுக்கு பின்னாலே
 
காட்சியான பணம் கைவிட்டு போனபின் சாட்சி Court ஏறாதடி
காட்சியான பணம் கைவிட்டு போனபின்
சாட்சி Court ஏறாதடி குதம்பாய் சாட்சி Court ஏறாதடி
பைபையாய் பொன் கொண்டோர் பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய் போகுமடி குதம்பாய் மெய் மெய்யாய் போகுமடி

நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது
நல்லவரானாலும் இல்லாதவரை
நாடு மதிக்காது குதம்பாய் நாடு மதிக்காது 
கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளி பணமடியே குதம்பாய் வெள்ளி பணமடியே
ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே
காசு காரியத்தில் கண்வையடா தாண்டவகோனே
 
ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே
காசு காரியத்தில் கண்வையடா தாண்டவகோனே
உள்ளே பகை வையடா தாண்டவகோனே
காசுக்கு உதட்டில் உறவாடடா தாண்டவகோனே
உள்ளே பகை வையடா தாண்டவகோனே
காசுக்கு உதட்டில் உறவாடடா தாண்டவகோனே
முட்டா பயலை எல்லாம் தாண்டவகோனே சில
முட்டா பயலை எல்லாம் தாண்டவகோனே
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவகோனே
முட்டா பயலை எல்லாம் தாண்டவகோனே
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவகோனே
கட்டி அழும் போதும் தாண்டவகோனே பிணத்த
கட்டி அழும் போதும் தாண்டவகோனே 
கட்டி அழும் போதும் தாண்டவகோனே
பணப்பெட்டி மேல கண்வையடா தாண்டவகோனே
கட்டி அழும் போதும் தாண்டவகோனே
பணப்பெட்டி மேல கண்வையடா தாண்டவகோனே
ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே
காசு காரியத்தில் கண்வையடா தாண்டவகோனே

Comments

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)