புறப்படு தமிழா புறப்படு (Purappadu thamizha purappadu)
படம்: வில்லாதி வில்லன்
உணர்வு: எழுச்சி
புறப்படு தமிழா புறப்படு
இந்த பூமியை கொஞ்சம் திருப்பிடு
கடவுள் அரசு திரும்ப வராது
கைகளை நம்பி நீ உழைத்திடு
மன்னர் ராஜ்ஜியம் ஒழிந்தது தம்பி
மந்திரி மாமூல் ஒழிவதெப்போ
புறப்படு தமிழா புறப்படு
இந்த பூமியை கொஞ்சம் திருப்பிடு
வந்தது எல்லாம் விதிப்படி என்றால்
வாழ்வது எல்லாம் வீண் தானே
விதியை உழைப்பால் வெல்வோம் என்று
வித்தகன் வள்ளுவன் சொன்னனே
அறிவும் உழைப்பும் அன்பும் இருந்தால்
அத்தனை மண்ணும் பொன் தானே
மூடநம்பிக்கை இருக்கும் வரையில் மொத்த வாழ்கையும் மண் தானே
இதை சொல்லித்தருவோம் சொல்லித்தருவோம் தந்தை பெரியார் போல்
இனி அள்ளித்தருவோம் அள்ளித்தருவோம் வள்ளல் MGR போல்
புறப்படு தமிழா புறப்படு
இந்த பூமியை கொஞ்சம் திருப்பிடு
புறப்படு தமிழா புறப்படு
இந்த பூமியை கொஞ்சம் திருப்பிடு
இந்திய நாட்டின் மூன்று பக்கமும் கடல் தான் கடல் தான் இருக்குதப்பா
இந்திய நாட்டின் நான்கு பக்கமும் கடன் தான் கடன் தான் இருக்குதப்பா
இந்திய நாட்டின் தேசிய கொடியோ மந்திரி காலில் கேடக்குதப்பா
இந்திய நாட்டை விற்ற பணம் தான் மந்திரி வீட்டை நிறைக்குத்தப்பா
இதை சொல்லித்தருவோம் சொல்லித்தருவோம் தந்தை பெரியார் போல்
இனி அள்ளித்தருவோம் அள்ளித்தருவோம் வள்ளல் MGR போல்
புறப்படு தமிழா புறப்படு
இந்த பூமியை கொஞ்சம் திருப்பிடு
கடவுள் அரசு திரும்ப வராது
கைகளை நம்பி நீ உழைத்திடு
மன்னர் ராஜ்ஜியம் ஒழிந்தது தம்பி
மந்திரி மாமூல் ஒழிவதெப்போ
புறப்படு தமிழா புறப்படு
இந்த பூமியை கொஞ்சம் திருப்பிடு
புறப்படு தமிழா புறப்படு
இந்த பூமியை கொஞ்சம் திருப்பிடு
புறப்படு தமிழா புறப்படு
இந்த பூமியை கொஞ்சம் திருப்பிடு
Comments
Post a Comment