ஒ ரசிக்கும் சீமானே (O rasikkum seemanae)
படம்: பராசக்தி
உணர்வு: உற்சாகம்
அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்
ஒ ரசிக்கும் சீமானே
ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடை அணிந்து களிக்கும் நடனம் புரிவோம்

கற்சிலையும் சித்திரமும் கண்டு அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு

கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு
வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமென்றே மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே

தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்
ஒ ரசிக்கும் சீமானே
ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடை அணிந்து களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்
வானுலகம் போற்றுவதை நாடி இன்ப வாழ்க்கையை இழந்தவர் கோடி

பெண்கள் இன்ப வாழ்கையை இழந்தவர் கோடி
வெறும் ஆணவத்தினாலே பெரும் ஞானியை போலே நினைந்து வீணிலே அலைய வேண்டாம்
வெறும் ஆணவத்தினாலே பெரும் ஞானியை போலே நினைந்து வீணிலே அலைய வேண்டாம்
தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்
ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடை அணிந்து களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்
Comments
Post a Comment