இளைய நிலா பொழிகிறதே (Ilaya nila pozhigirathae)

படம்: பயணங்கள் முடிவதில்லை
உணர்வு: வியப்பு

இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே
உலாபோகும் மேகம் கனா காணுமே விழா காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே
உலாபோகும் மேகம் கனா காணுமே விழா காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே

வரும் வழியில் பனிமழையில் பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும்
வரும் வழியில் பனிமழையில் பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும்
வானவீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவமகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா பொழிகிறதே
உலாபோகும் மேகம் கனா காணுமே விழா காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே

முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ
நீலவானிலே வெள்ளி ஓடைகள்
ஓடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே
உலாபோகும் மேகம் கனா காணுமே விழா காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே

குறிப்பு: இது நூறாவது (1௦௦) பாடல்.

Comments

  1. //முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ

    முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ//

    இது திரைப்படப்பாடலில் உள்ள தற்குறிப்பேற்ற அணி க்கு உதாரணம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)