காதோடு தான் நான் பாடுவேன் (Kaathodu thaan naan paduvaen)

படம்: வெள்ளி விழா
உணர்வு: தவிப்பு

காதோடு தான் நான் பாடுவேன்
மலரோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

காதோடு தான் நான் பாடுவேன்
மலரோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

காதோடு தான் நான் பாடுவேன்

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறுபிள்ளை தான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
வளர்ந்தாலும் நான் இன்னும் சிறுபிள்ளை தான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா
குலவிளக்காக நான் வாழ வழிகாட்டவா

காதோடு தான் நான் பாடுவேன்
மலரோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

காதோடு தான் நான் பாடுவேன்

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது

காதோடு தான் நான் பாடுவேன்
மலரோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

Comments

Post a Comment