காற்றினிலே வரும் கீதம் (Kaatrinilae varum geetham)

படம்:  மீரா

காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம் கல்லும் கனியும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம் பண்ணொளி பொங்கிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் மதுர மோகன கீதம்
நெஞ்சினிலே நெஞ்சில் இன்ப கனலை எழுப்பி நினைவளிக்கும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

துணை வண்டுடன் சோலைக்குயிலும் மனம் குளிர்ந்திடவும்
வானவெளி தனில் தாராகணங்கள் தயங்கி நின்றிடவும்
ஆயன் சொல்வேன் மாயப்பிள்ளை வெய்குழல் பொழில் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில்
நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில்
நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம் காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருகுமோ என் உள்ளம்

காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)