தென்றல் என்னை முத்தமிட்டது (Thendral ennai muthamitathu)

படம்: ஒரு ஓடை நதியாகிறது

தென்றல் என்னை முத்தமிட்டது
தென்றல் என்னை முத்தமிட்டது
இதழில் இனிக்க இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க

தென்றல் என்னை முத்தமிட்டது
இதழில் இனிக்க இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க

தென்றல் என்னை முத்தமிட்டது

நீண்ட நாளாய் பூக்கள் சேர்த்தேன்
உன்னை எண்ணி மாலை கோர்த்தேன்
தூரம் நின்று நானும் பார்த்தேன்
என்னை நானே காவல் காத்தேன்
கனவில் ஏதோ கோலம் போட்டேன்
ஆ.....
கனவில் ஏதோ கோலம் போட்டேன்
காதல் மேளம் நானும் கேட்டேன்

தென்றல் என்னை முத்தமிட்டது
இதழில் இனிக்க இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க

தென்றல் என்னை முத்தமிட்டது

காமன் தோட்டம் பூத்த நேரம்
நாணம் வந்து வேலி போடும்
ஊடல் என்னை தீண்டச்சொல்லும்
வேலி உன்னை மேயச்சொல்லும் 
காத்துக்கிடந்த சோலையோரம்
ஆ.....
காத்துக்கிடந்த சோலையோரம்
கங்கை வந்து பாயும் நேரம்

தென்றல் என்னை முத்தமிட்டது
இதழில் இனிக்க இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க
தென்றல் என்னை
தென்றல் என்னை
தென்றல் என்னை முத்தமிட்டது

Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

ஒரு தெய்வம் தந்த பூவே (Oru deivam thantha poove)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)