சின்னசிறு வயதில் எனக்கோர் (Chinnachiru vaayathil)

படம்: மீண்டும் கோகிலா
பாடியவர்கள்: S.P. ஷைலஜா, K.J. யேசுதாஸ்

சின்னசிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

சின்னசிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

மோகன புன்னகையில் ஓர்நாள் மூன்று தமிழ் படித்தேன்
மோகன புன்னகையில் ஓர்நாள் மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லிவைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நானோர் ஊமையை போலிருந்தேன்
ஊமையை போலிருந்தேன் ம்ம்....
ஆ...ஆ...
கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான்

சின்னசிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

வெள்ளி பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
வெள்ளி பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே மோதும் விரகத்திலே செல்லம்மா ம்..ம்..

சின்னசிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

ஒரு தெய்வம் தந்த பூவே (Oru deivam thantha poove)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)