புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி கான்பதில்லை (Puthi ulla manithanellam)

படம்:  அன்னை
உணர்வு: அனுபவம்
ஆக்கம்: கண்ணதாசன்
பாடியவர்: சந்திரபாபு (Chandrababu)

புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி கான்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை
புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி கான்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை

பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்

புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி கான்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை
மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி கான்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை

கனவு காணும் மனிதனுக்கு நினைபதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து அழைப்பாள்

புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி கான்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை

Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

ஒரு தெய்வம் தந்த பூவே (Oru deivam thantha poove)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)