ஏறாத மலைதனிலே (Yeraatha malaithanilae)

படம்: தூக்கு தூக்கி
பாடியவர்: T.M. சௌந்தர்ராஜன்

ஏறாத மலைதனிலே ஜோரான கவுதாரி ரெண்டு
தாராளமா இங்கே வந்து ததிங்கின தோம் தாளம் போடுதையா
ஏறாத மலைதனிலே ஜோரான கவுதாரி ரெண்டு
ஏறாத மலைதனிலே ஜோரான கவுதாரி ரெண்டு
தாராளமா இங்கே வந்து ததிங்கின தோம் தாளம் போடுதையா
தாராளமா இங்கே வந்து ததிங்கின தோம் தாளம் போடுதையா
ததிங்கின தோம் தாளம் போடுதையா

கல்லான உங்கள் மனம் கலங்கி நின்று ஏங்கயிலே
கண் கண்ட காளியம்மா கருணை செய்வதெக்காலம்
போடு தாம் திமிதிமி தந்த கோனாரே
தீம் திமிதிமி திந்த கோனாரே
ஆனந்த கோனாரே அறிவு கெட்டு தான் போனாரே
ஆனந்த கோனாரே அறிவு கெட்டு தான் போனாரே

செக்க செவேறன செம்மறி ஆடுகள் சிங்காரமாக நடைநடந்து
செக்க செவேறன செம்மறி ஆடுகள் சிங்காரமாக நடைநடந்து
வக்கனையாகவே பேசிக்கொண்டு பலி வாங்கும் பூசாரியை நம்புதடா
வக்கனையாகவே பேசிக்கொண்டு பலி வாங்கும் பூசாரியை நம்புதடா

போடு தாம் திமிதிமி தந்த கோனாரே
தீம் திமிதிமி திந்த கோனாரே
ஆனந்த கோனாரே அறிவு கெட்டு தான் போனாரே

சோலைவனங்கள் தழைத்திருக்க.......
சோலைவனங்கள் தழைத்திருக்க அதை சொந்தமாய் தீண்டும் சுகமிருக்க
சோலைவனங்கள் தழைத்திருக்க சொந்தமாய் தீண்டும் சுகமிருக்க
பாலைவனத்தையே நம்பி வந்து......
பாலைவனத்தையே நம்பி வந்து பழி வாங்கும் பூசாரியை தேடுதடா
பாலைவனத்தையே நம்பி வந்து பழி வாங்கும் பூசாரியை தேடுதடா
போடு தாம் திமிதிமி தந்த கோனாரே
தீம் திமிதிமி திந்த கோனாரே
ஆனந்த கோனாரே அறிவு கெட்டு தான் போனாரே

தாம் திமிதிமி தந்த கோனாரே
தீம் திமிதிமி திந்த கோனாரே
தாம் திமிதிமி தந்த கோனாரே
தீம் திமிதிமி திந்த கோனாரே

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)