காஞ்சி பட்டு சேல கட்டி (Kaanchi pattu sela katti)

படம்: ரெட்டை ஜடை வயசு
உணர்வு: ஏக்கம்

காஞ்சி பட்டு சேல கட்டி
கால் கொலுசில் தாளம் தட்டும்
கன்னி பொன்னே நின்னு கேளம்மா
என் மனைவி வந்த பின்னால்
என்னவெல்லாம் செய்வேனென்று
சேர்த்து வைத்த ஆசை சொல்லவா
சேலை தான் Old ஆச்சு
சுடிதாரும் போயாச்சு
நித்தம் ஒரு Jeans போட்டு
முட்டி தொடும் midiஉம் போட்டு
கொஞ்சம் கொஞ்சம் lipstick போட்டு
அவளை நான் ரசிப்பேன்
மாசத்துக்கு ரெண்டு தரம்
beauty parlour கூட்டி போவேன்
ராத்திரியில் nightieஐ போல்
நானே தானிருப்பேன்

காஞ்சி பட்டு சேல கட்டி
கால் கொலுசில் தாளம் தட்டும்
கன்னி பொன்னே நின்னு கேளம்மா

Scooter ஓட்ட சொல்லுவேன்
இடுப்பில் கையை போடுவேன்
முன்னால் பார்த்து ஓட்டுன்னு
பின்னால் மெல்ல கிள்ளுவேன்
தூங்கி போனால் சம்மதம்
தோசை நானே ஊத்துவேன்
ஊருக்கேதும் போயிட்டா
உள்ளுக்குள்ளே ஏங்குவேன்
அவள் முகம் என் மகனுக்குமே
வரும்படி ஒரு வரம் கேட்பேன்
அவள் பெயர் தனை initial ஆய்
இடும்படி நான் செய்திடுவேன்
அவள் தாவணி பருவத்தின்
Love Letter அனைத்தையும்
இருவரும் படித்திடுவோம்
எங்கள் முதுமை பருவத்து முத்தங்கள்
கூட இனிப்பென ருசித்திடுவோம்
வெங்காயத்தை வெட்டும் போதும்
கண் கலங்க கூடாதம்மா
வெங்காயமே வேண்டாம் கண்ணே
நான் அதை வெறுத்திடுவேன்

காஞ்சி பட்டு சேல கட்டி
கால் கொலுசில் தாளம் தட்டும்
கன்னி பொன்னே நின்னு கேளம்மா

அடடா எந்தன் mummyக்கும்
hitech நடையை பழக்கணும்
சுடிதார் போட்டு பார்க்கணும்
தோழி போல பழகனும்
அழகா பொண்ணு போகையில்
அதை நான் ரசிச்சு பார்க்கையில்
காதலி மெல்ல திருகனும்
ஆனா என்னை ரசிக்கணும்
அவள் தலை தனில் பூ வைத்து
அதை புகைப்படம் எடுத்து வைப்பேன்
அவள் பிடிக்கலை என்று சொன்னால்
Beer அடிப்பதை நிறுத்திடுவேன்
ஒரு நாளைக்கு மூனென முறைவிட்டு
அவள் தரும் Cigaretteஐ குடிதிடுவேன்
என் சில்மிஷதனங்களில் சிதறிடும்
jacket hookஇணை தைத்திடுவேன்
கோபப்பட்டு திட்டிவிட்டு
கொல்லப்பக்கம் போய் நின்னு
அக்கம்பக்கம் பார்த்துவிட்டு
மெல்ல நான் அழுவேன் 

காஞ்சி பட்டு சேல கட்டி
கால் கொலுசில் தாளம் தட்டும்
கன்னி பொன்னே நின்னு கேளம்மா
என் மனைவி வந்த பின்னால்
என்னவெல்லாம் செய்வேனென்று
சேர்த்து வைத்த ஆசை சொல்லவா
சேலை தான் Old ஆச்சு
சுடிதாரும் போயாச்சு
நித்தம் ஒரு Jeans போட்டு
முட்டி தொடும் midiஉம் போட்டு
கொஞ்சம் கொஞ்சம் lipstick போட்டு
அவளை நான் ரசிப்பேன்

Comments

  1. பாடல் அருமை எழுதிய வாசன் மறைந்தாலும் இன்னும் பிடிக்கும் பாடல்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)