நான் வானவில்லையே பார்த்தேன் (Naan vaanavillaiyae paarthaen)

படம்:  மூவேந்தர்
உணர்வு: வியப்பு

ஓ...
நான் வானவில்லையே பார்த்தேன்
அதை காணவில்லையே வேர்த்தேன்
நான் வானவில்லையே பார்த்தேன்
அதை காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலை பார்வை ஜன்னலாய் வீச சொல்லியா கேட்டேன்
இனி நிலவை பார்க்கவே மாட்டேன்

கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென மயிலும் நடனமிடுமோ
பூவிலாடிவரும் வண்டு இமையில் விழ கண்களாகி விடுமோ
தேடி தின்று விட ஆசை கிள்ளுதடி தேனில் செய்த இதழோ
மூடிவைத்த முயல் மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ
பகல் நேரம் நிலவை பார்த்தது நானடி கண்ணம்மா
முந்தானை வாசம் வந்ததது ஆறுதல் சொல்லம்மா
விழி கண்டவர் கொஞ்சிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா

நான் வானவில்லையே பார்த்தேன்
அதை காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலை பார்வை ஜன்னலாய் வீச சொல்லியா கேட்டேன்
இனி நிலவை பார்க்கவே மாட்டேன்

சேலை சூடி ஒரு சோலை போன வழி பூக்கள் சிந்தி விழுமோ
பாலையான மனம் ஈரமானதடி பார்வை தந்த வரமோ
பாதம்பட்ட இடம் சூடு கண்டு உனை நானும் கண்டுவிடுவேன்
காதலான மழை சாரல் தூவிவிட மார்பில் ஒதுங்கிவிடுவேன்
பொய்மானை தேடி சென்றது ராமனின் கண்ணம்மா
மெய்மானே தேடி சென்றது மாறனின் நெஞ்சம்மா
விழி கண்டவர் கொஞ்சிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா

நான் வானவில்லையே பார்த்தேன்
அதை காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலை பார்வை ஜன்னலாய் வீச சொல்லியா கேட்டேன்
இனி நிலவை பார்க்கவே மாட்டேன்
ஓ....

Comments

Post a Comment

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)