தங்கமகனின்று சிங்கநடை (Thanga maganindru singanadai)

படம்: பாட்ஷா

தங்கமகனின்று சிங்கநடை போட்டு அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்

கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே
வெட்க தாழ்பாள் அது வேந்தனை கண்டதும் விலகியதே
ரத்த தாமரை முத்தம் கேட்குது வா என் வாழ்வே வா

தங்கமகனின்று சிங்கநடை போட்டு அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்

சின்ன கலைவாணி நீ வண்ண சிலைமேணி
அது மஞ்சம் தனில் மாறன் தலை வைக்கும் இன்பத் தலகாணி 
ஆசை தலைவன் நீ நான் அடிமை மகராணி
மங்கை இவள் அங்கம் எங்கும் பூச நீதான் மருதாணி
திறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும்
தென்பாண்டி தென்றல் திறந்தாக வேண்டும்
என்ன சம்மதமா இன்னும் தாமதமா

தங்கமகனின்று சிங்கநடை போட்டு அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்

தூக்கம் வந்தாலே மனம் தலையணை தேடாது
தானே வந்து காதல் கொள்ளும் உள்ளம் ஜாதகம் பார்க்காது
மேகம் மழை தந்தாள் துளி மேலே போகாது
பெண்ணின் மனவானில் விழ வேண்டும் விதிதான் மாறாது
என் பேரின் பின்னே நீ சேர வேண்டும்
கடல் கொண்ட கங்கை நிறம் மாற கூடும்
எனை மாற்றி விடு இதழ் ஊற்றி கொடு

தங்கமகனின்று சிங்கநடை போட்டு அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்
தங்கமகனின்று சிங்கநடை போட்டு அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை உன் காதலன் கண்டதும் நழுவியதோ
வெட்க தாழ்பாள் அது வேந்தனை கண்டதும் விலகியதோ
முத்தம் என்பதன் அர்த்தம் பழகிட வா என் வாழ்வே வா

தங்கமகனின்று சிங்கநடை போட்டு அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்

Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)