காதலின் தீபமொன்று (Kaathalin theebamondru)

படம்:  தம்பிக்கு எந்த ஊரு
உணர்வு: அனுபவம்
பாடியவர்: S.P. பாலசுப்ரமணியம்

காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க

காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்

நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
அன்பிலே வாழும் நெஞ்சில் ஆ....
அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே
ஒன்று தான் உள்ளம் என்றால் உறவு தான் ராகமே
எண்ணம் யாவும் சொல்ல வா

காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்

என்னை நான் தேடி தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்
என்னை நான் தேடி தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்
பொன்னிலே பூவை அள்ளும் ஆ...
பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்த கவிதையை பாடுதே
அன்பே இன்பம் சொல்ல வா

காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க
காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்

Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

ஒரு தெய்வம் தந்த பூவே (Oru deivam thantha poove)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)