மலை கோவில் வாசலில் (Malai kovil vaasalil)

படம்:  வீரா
பாடியவர்கள்: மனோ, சுவர்ணலதா

மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே
முத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே கொடு ஆயிரம் சுகங்களையே

நாடகம் ஆடிய பாடகன் ஓ..
நீயின்று நான் தொடும் காதலன் ஓ..
நீ சொல்ல நான் மெல்ல மாறினேன்
நன்றியை வாய்விட்டு கூறினேன்
தேரழகன் சின்ன பேரழகன்
உன்னை சேராதா உடன் வாராதா
மானழகும் கெண்டை மீனழகும்
கண்கள் காட்டாதா இசை கூட்டாதா
பாலாடை இது மேலாடும்
வண்ண மேலாடை இனி நீயாகும்

மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே
முத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே கொடு ஆயிரம் சுகங்களையே
மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே

நானொரு பூச்சரம் ஆகவோ ஓ...
நீள்குழல் மீதினில் ஆடவோ ஓ...
நானொரு மெல்லிசை ஆகவோ
நாளும் உன் நாவினில் ஆடவோ
நான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள்
நாள்தோறும் உந்தன் சீர் பாடும்
பூங்கரத்தில் பசுன்பொன் நிறத்தில்
வளை கூத்தாடும் உந்தன் பேர் பாடும்
மாக்கோலம் மழை நீர்க்கோலம்
அந்த நாள் காணும் இந்த ஊர்கோலம்

மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே
முத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே கொடு ஆயிரம் சுகங்களையே
முத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே கொடு ஆயிரம் சுகங்களையே

மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)