தோல்வி நிலையென நினைத்தால் (Tholvi nilaiyena ninaithaal)

படம்: ஊமை விழிகள்
உணர்வு: தன்னம்பிக்கை, வீரம்
ஆக்கம்: ஆபாவாணன்

தோல்வி  நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா

வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா

விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா

Comments

  1. One of the best motivational song ever...Thanks for the post

    ReplyDelete
  2. thanmaana unarvu mika paadal,varigaluku nandri

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)