புஞ்சை உண்டு நஞ்சை உண்டு (Punjai undu Nanjai undu)

படம்: உன்னால் முடியும் தம்பி
உணர்வு: தன்னம்பிக்கை
ஆக்கம்: கங்கை அமரன்

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல
எங்க பாரதத்தில் சோத்து சண்ட தீரவில்ல
வீதிக்கொரு கட்சி உண்டு சாதிகொரு சங்கமுண்டு
நீதி சொல்ல மட்டுமிங்கு நாதியில்ல
சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல
இது நாடா இல்ல வெறும் காடா
இத கேட்க யாருமில்ல தோழா
இது நாடா இல்ல வெறும் காடா
இத கேட்க யாருமில்ல தோழா

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல
எங்க பாரதத்தில் சோத்து சண்ட தீரவில்ல

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை யாரிங்கு கட்டி வைத்து கொடுத்தது
ஊருக்கு பாடுபட்டு இளைத்த கூட்டமோ வீடின்றி வாசலின்றி தவிக்குது
எத்தனை காலம் இப்படி போகும் என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம் என்றிங்கு மாறும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல
எங்க பாரதத்தில் சோத்து சண்ட தீரவில்ல

ஆத்துக்கு பாதையிங்கு யாரு தந்தது தானாக பாதை கண்டு நடக்குது
காற்றுக்கு பாட்டு சொல்லி யாரு தந்தாது தானாக பாட்டு ஒன்னு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும் நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே பொன்னொளி வேண்டும் கண்ணுக்குளே
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா
கங்கையும் தெற்கே பாயாதா காவிரியோடு சேராதா
பாடுபடும் தோழர்களின் தோழ்களில் மாலை சூடாதா

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல
எங்க பாரதத்தில் சோத்து சண்ட தீரவில்ல
இது நாடா இல்ல வெறும் காடா
இத கேட்க யாருமில்ல தோழா
இது நாடா இல்ல வெறும் காடா
இத கேட்க யாருமில்ல தோழா

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)