சக்கரை நிலவே பெண் நிலவே (Sakkarai nilavae pen nilavae)

படம்: யூத் (Youth)
உணர்வு: ஏக்கம்
ஆக்கம்: வைரமுத்து

சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே


சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே
மனம் பச்சைத்தண்ணி தான் பெண்ணே
அதை பற்ற வைத்தது உன் கண்ணே
என் வாழ்கை என்னும் காட்டை எரித்து
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா


சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணரத்தானே முடியும் அதன் உருவமில்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தையில்லை
அன்பே உன் புன்னகையை நான் அடி நெஞ்சில் சேமித்தேன்
கண்ணே உன் புன்னகையில் நான் கண்ணீராய் உருகியதேன்
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா 
அதில் கொள்ளை போனது என் தவறா
பிரிந்து சென்றது உன் தவறா
நான் புரிந்து கொண்டது என் தவறா

ஆன் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம் சதையல்ல கல்லின் சுவரா

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா

November மாத மழையில் நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
மொட்டைமாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யாரென்றால் சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் எதோ மயக்கம் என நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்தர் சிலை என் கனவில் வருவது பிடிக்குமென்றேன்
தயக்கம் என்பதே சிறிதுமின்றி அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்குமென்றாய்
அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க என்னையேன் பிடிக்காதென்றாய்


Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)