இளமை என்னும் பூங்காற்று (Illamai ennum poongaatru)

படம்:  பகலில் ஒரு இரவு
உணர்வு: ஏக்கம்

இளமை என்னும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
இளமை என்னும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்

தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா

இளமை என்னும் பூங்காற்று

அங்கம் முழுதும் பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்ற
அள்ளி அணைக்க கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள்
கேள்வி எழும் முன் விழுந்தாள்
எந்த உடலோ என்ன உறவோ

இளமை என்னும் பூங்காற்று

மங்கை இனமும் மன்னன் இனமும்
குளம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலை தான் என்ன விதியோ

இளமை என்னும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
ஒரே வீணை ஒரே ராகம்

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)