நூலுமில்லை வாலுமில்லை (Noolumillai vaalumillai)

படம்: இரயில் பயணங்களில்
உணர்வு: வேதனை
ஆக்கம்: டி. ராஜேந்தர்

வசந்த ஊஞ்சலிலே அசைந்த பூங்கொடியே
உதிர்ந்த மாயமென்ன உன் இதய சோகமென்ன
உன் இதய சோகமென்ன

நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனா
நாதியில்லை தேவியில்லை நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா

நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனா
நாதியில்லை தேவியில்லை நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா

நினைவு வெள்ளம் பெருகி வர நெருப்பெனவே சுடுகிறது
படுக்கை விரித்து போட்டேன் அதில் முள்ளாய் அவளின் நினைவு
பாழும் உலகை வெறுத்தேன் அதில் ஏனோ இன்னும் உயிரு

படுக்கை விரித்து போட்டேன் அதில் முள்ளாய் அவளின் நினைவு
பாழும் உலகை வெறுத்தேன் அதில் ஏனோ இன்னும் உயிரு
மண்ணுலகில் ஜென்மம் என என்னை ஏனோ இன்று விட்டு வைத்தாய்
கண்ணிரண்டில் திராட்சை கொடி எண்ணம் வைத்து கண்ணீரை பிழிந்தெடுத்தாய்
இறைவா... கண்ணீரை பிழிந்தெடுத்தாய்

நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனா
நாதியில்லை தேவியில்லை நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா

நிழலுருவில் இணைந்திருக்க நிஜம்வடிவில் பிரிந்திருக்க 
பூத்தால் மலரும் உதிரும் நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும் அவள் நினைவோ தேய்வதில்லை
பூத்தால் மலரும் உதிரும் நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும் அவள் நினைவோ தேய்வதில்லை
காடுதன்னில் பாவி உயிர் வேகும் வரை பாவை உன்னை நினைத்திடுவேன்
பாடையிலே போகையிலும் தேவி உன்னை தேடி உயிர் பறந்திடுமே
உறவை... தேடி உயிர் பறந்திடுமே

நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனா
நாதியில்லை தேவியில்லை நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா நானும் வாழ்வை ரசிப்பேனா

Comments

Post a Comment

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

ஒரு தெய்வம் தந்த பூவே (Oru deivam thantha poove)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)